கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய நவாஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

navas principal– பழுலுல்லாஹ் பர்ஹான்

கல்முனை: கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் 40 வருட சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். மூதூரைப் பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் எம்.எச் நவாஸ் தனது ஆரம்பக்கல்வியை மூதூர் மத்திய கல்லூரியிலும், உயர்தரக்கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்றார்.

அட்டாளைச்சேனை ஆசிரிய கல்விக் கல்லூரியில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக வெளியேறிய எம்.எச் நவாஸ் முதல் நியமனமாக 1975 இல் மூதூர் பெரிய பாலம் சீ.எம்.எம்.எஸ். இல் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார்.

அதன் பின்னர் 5 வருடங்களாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும்,கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் சுமார் 13 வருடங்களும் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக சிறந்த சேவையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் 1980 இல் அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று 2004 தொடக்கம் 2009 வரை கல்முனை அல்பஹ்றியா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் அதே பாடசாலையின் அதிபராக 2009 தொடக்கம் 2012 வரை கடமையாற்றினார்.

navas principal
அதிபர் எம்.எச் நவாஸ்

அதன் பின்னர் 2013 தொடக்கம் 2015 ஏப்ரல் 25 வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அதிபராகக் கடையாற்றி ஓய்வு பெற்றார்.

இவருடைய காலத்தில் க.பொ.த. சாதாரண­தரப் பரீட்சை,மற்றும் க.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அம்பாறை மாவட்டத்தில் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு அதிபர் எம்.எச் நவாஸ் சாரணியத்தில் 1994 ம் ஆண்டு தருசின்னம் பெற்றவர்.

உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் அதிபர் எம்.எச் நவாஸ் கல்விச் செயற்பாடுகளுக் கப்பால் சென் ஜோன் அம்பியூலன்ஸ் சேர்விஸ்- சுப்ரின்டன் வழிநடத்தல்களினையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார் இவர் அம்பியூலன்ஸ் படையணியில் ஏராளமான மாணவர்களை வழிநடத்தியுள்ளார்.

மூதூர் பொபியுலர் விளையாட்டுக்கழக உறுப்பினரான இவர் 2012 இல் தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி முதுமானிப் பட்டம் பெற்றார் இவருக்கு அன்மையில் பட்டமளிப்பு விழாவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment