ஐரோப்பிய சம்பியன் லீக் இறுதிப்போட்டிக்கு பார்ஸிலோனா தகுதி

football– MJ

மியூனிக்: நேற்றிரவு பேயர்ன் மியூனிக் மைதானத்தில் இடம்பெற்ற பேயர்ன் மியூனிக்-பார்ஸிலோனா ஆகிய அணிகளுக்கிடையிலான ஐரோப்பிய சம்பியன் லீக் அரையிறுதிப்போட்டியின் நொக்கவுட் சுற்றில் பேயர்ன் மியூனிக் அணியை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து, பார்ஸிலோனா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கின்றது.

முதலாவது லீக் அரையிறுதிப்போட்டியில் 3:0 எனும் கோல் அடிப்படையில் களமிறங்கிய பார்ஸிலோனா அணி, நேற்றைய ஆட்டத்தில் மேலும் இரு கோல்களைப் பெற்றிருந்தது. பேயர்ன் மியூனிக் 3 கோல்களை நேற்றியை ஆட்டத்தில் பெற்றிருந்த போதிலும், மொத்த கோல்கள் அடிப்படையில் 3:5 எனும் வித்தியாசத்தில் பார்ஸிலோனா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கின்றது.

football

இன்றிரவு இடம்பெறும் ரியல் மெட்ரிட், ஜூவின்டஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான நொக்கவுட் சுற்று அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டியில் பார்ஸிலோனாவைச் சந்திக்கும். ஜூவின்டஸ் அணி 1:0 எனும் கோல் அடிப்படையில் முன்னணியில் இருக்கின்றது. இன்றிரவு இடம்பெறும் ஆட்டம் ரியல் மெட்ரிக் மைதானத்தில் இடம்பெறுவதால், வெற்றிக்கான அதிக வாய்ப்புக்கள் ரியல் மெட்ரிக் அணிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by

Leave a comment