காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது

shiblyஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி: இவ்வாண்டுக்கான (2015) ஆதன வரிகள் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென 4 தொடக்கம் 5 மடங்காக அதிகரிக்கப்பட்டமையானது மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது.

வரிகள் திடீரென பன்மடங்காக அதிகரிக்கப்பட்டதனால் வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களும், அன்றாடம் பிழைப்பு நடாத்தி தமது சீவியத்தை கொண்டு செல்லும் மக்களும், சிறியசிறிய வியாபாரங்களில் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களும், மற்றும் அணைத்து தரப்பினரும் மிக பாரிய அசௌகரியத்தினை முகம் கொடுத்து வருகின்றனர் என்பதை அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் இந்த விடயத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் ஹாபீஸ் அவர்களின் கவனத்திற்கு கடந்த 11.02.2015 அன்று கடிதம் மூலம் இவ் வரி அதிகரிப்பு அறவீட்டினை நிறுத்துமாறு ஆணித்தரமாக வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அவர்கள் வரி அறவீட்டில் மாற்றம் செய்வதென்றால் நகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் 160-(3) ம் பிரிவுக்கு அமைவாக கௌரவ முதலமைச்சரின் அனுமதியை பெற்றே மாற்றம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் காத்தான்குடி நகரசபை அவ்வாறான அனுமதியினைப் பெறவில்லை. எனவே கௌரவ முதலமைச்சர் அவர்களின் அனுமதி பெறும் வரை குறித்த வரி அறவீடுகளை தாமதப்படுத்துமாறு முதலமைச்சரின் செயலாளர் அவர்கள் உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எனவே கௌரவ முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல் வரும் வரை வரி அதிகரிப்பிற்கு முன்னுள்ள வரியினை மாத்திரம் செலுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் காத்தான்குடி மக்களை கேட்டுக்கொள்கின்றார்.

Published by

One response to “காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட காணிகள், வீடுகள், வியாபார ஸ்தாபனங்களுக்கு திடீரென மக்களுக்கு ஒர் பாரிய வரிச்சுமையாக காணப்படுகின்றது”

  1. Pls change Urban Council into Pradhesiya Sabha.

Leave a comment