காத்தான்குடி: முன்னால் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் எதிர்வரும் (15-05-2015 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தனது ஆதரவாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் பொது மக்களுக்காக கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் விசேட உரை ஒன்றினை நிகழ்த்தவுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.
‘காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் இன்றைய அரசியல் நிலவரம்’ தொடர்பாக பல்வேறுபட் அதிரடியான தனது கருத்தக்களை மேற்படி கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நிகழ்த்த இருப்பதாகவும் தகவல்.
என்ன சொல்லப் போகின்றார் முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் என பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அன்றைய தினம் நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் அனைத்து பொது மக்களையும் ஊடகவியலாளர்களையும் கலந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published by

Leave a comment