உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமான உயர்மட்ட சந்திப்பு

Harees MPssஹாசிப் யாஸீன்

கல்முனை: உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் சம்பந்தமான உயர்மட்ட சந்திப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவினருக்குமிடையில் இன்று (11) திங்கட்கிழமை பொது நிர்வாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சில் இடம்பெற்றது.

பொது நிர்வாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே. தடலகே தலைமையில் இடம்பெற்ற இம் உயர்மட்ட சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வட்டார முறைமையில் இடம்பெறவுள்ளதால் அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் நிலவும் குறைபாடுகள், அப்பிரதேசங்களில் வட்டாரங்களை உருவாக்குதல், அதற்கான எல்லைகளை நிர்ணயித்தல், பிரதிநிதிகள் ஒதுக்கீடு சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

குறிப்பாக கல்முனை பிரதேச எல்லைகள் நிர்ணயம் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்; சில பரிந்துரைகளை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினரிடம் முன்;வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளால் எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்கு வழங்கிய பரிந்துரைகளை பரிசீலித்து அதனை ஏற்றுக்கொள்வதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment