லாஹூர்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் சஹாரியார் கான் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்புக்குப் பின்னர் அரசியல் காரணங்களால் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட் உறவு பாதிக்கப்பட்டது.
சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012-இல் இந்தியாவில் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் இரண்டு இருபது-20 போட்டிகள் கொண்ட குறுகிய தொடரில் பங்கேற்றன. அதன் பின்னர் ஐ.சி.சி. ஒருங்கி ணைத்த போட்டிகளிலேயே இருநாட்டு அணி களும் விளையாடின.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் சஹாரியார் கான், இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) தலைவர் ஜக்மோகன் டால்மியாவை கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர் சஹாரியார் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் தொடரை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளோம். இது இருநாட்டு கிரிக் கெட் அணிகளிடையே மறுமலர்ச்சியை உண்டாக்கும். ஏற்கனவே திட்டமிட்டப்படி மூன்று டெஸ்ட், 5 ஒரு நாள் ஆட்டங்கள், இரண்டு இருபது-20 ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பரில் ஆரம்பமாகும். இதற்கான ஆயத்தங்கள் மும்முரமாக நடக்கின்றன. எல்லா தடைகளையும் மீறி இது நடக்கும் என்றார்.
பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியா இது தொடர்பாக கூறுகையில், “இந்த தொடரை மீண்டும் நடத்துவதற்கு நம்பிக்கையுடன் உள்ளோம். சில விடயங்கள் மட்டுமே தடையாக உள்ளன. பொது ஆதரவு இல்லா மல் எங்களால் இதில் முன்னோக்கி செல்ல இயலாது. அரசு மற்றும் உள்துறை அமைச் சகத்தின் ஆதரவு இல்லாமல் எங்களால் எதையும் செய்ய முடியாது. இந்த நிமிடத்தில் எந்த தடையும் இல்லை” என்றார்.
இருப்பினும் பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஹாரியார் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனிப்பட்ட முறையில் டால்மியா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். தாங்கள் இரு நாட்டு கிரிக்கெட் சபை தலைவர்களாக ஏற்கனவே செயல்பட்டபோது இருந்த உறவுகளை நினைவு கூர்ந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by


Leave a comment