இங்கிலாந்து குடிவரவு அதிகாரி ஒருவர் தன்னை மரியாதை குறைத்து நடந்ததாக சங்கக்கார வருத்தம்

sangaலண்டன்: இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இங்கிலாந்து சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். குடிவரவு அதிகாரி ஒருவர், தன்னை மரியாதை குறைவான விதத்தில் நடத்தியதாகவும் கடந்த 15 வருடங்களாக இங்கிலாந்து வருகின்ற போதும் இந்த முறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், அந்த அதிகாரியின் நடவடிக்கை மிகுந்த அசௌகரியத்தையும் அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக ஏனைய அனைத்து குடிவரவு அதிகாரிகள் மிகுந்த கனிவுடன் நடந்து கொண்டார்கள். சர்வதேச பயணிகளிடம் நிறத்தையோ, மதத்தையோ, அவர்களது புகழையோ பார்க்கக்கூடாது.

நல்ல எண்ணத்துடன் நாட்டுக்கு வருவோர் நல்ல விதமாக நடத்தப்பட வேண்டியது அவசியமானது என்று கூறியுள்ளார்.

குமார் சங்கக்கார இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றாக ‘சரே’ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, போட்டிகளில் விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment