காலி: கொக்கலயிலிருந்து மீப்பே வைத்தியசாலையூடாக அக்குரஸ்ஸ வீதியில் காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று சற்று முன்னர் குடை சாய்ந்ததாக பொலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது பஸ் வண்டியில் அதிகமான பயணிகள் இருந்ததாகவும் பஸ் வண்டி குடை சாய்ந்த போது கதவுகள் இரண்டும் வீதிப் பக்கம் மூடிப்படும் வகையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தோர் வேறு வாகனங்களில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும். காயமடைந்தோரின் எண்ணிக்கை இது வரை தெரியவரவில்லை எனவும் பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.
பஸ் வண்டியின் மிதிபலகையில் பயணம் செய்தோர் பஸ் வண்டிக்கும் வீதிக்கும் இடையே சிக்குண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அண்மையில் காலி – ஹபராதுவ பகுதியில் பஸ் சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று கடலுக்குள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment