இலங்கை சுற்றுலா பயணத்துறையை ஊக்குவிக்க துபாயில் இடம்பெற்ற முன்னேற்ற நடவடிக்கைகள்

dubai (3)– ஏ.சி.எம். சப்றி

துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவராலயம் , இலங்கைச்சுற்றுலா அபிவிருத்திச்சபையுடன் இணைந்து பல்வேறு உல்லாசத்துறை ஊக்குவிப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தது . கடந்த 2 ம் திகதி தொடக்கம் 7 ம் திகதி வரை துபாய் உலக வர்த்தக மையத்தில் இடம் பெற்ற அரபு சுற்றுலா கண்காட்ச்சியில் இலங்கையை சேர்ந்த 56 கம்பனிகளும் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின்லங்கா, இலங்கை தேயிலைச்சபை என்பன பங்கேற்றன.

கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்ட இலங்கைக்கான காட்ச்சிக்கூடத்தினை துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவர் எம் . எம். அப்துல் றஹீம் மற்றும் உல்லாசப் பயணத்துறை அதிகாரிகளும் திறந்து வைத்தனர் . ஸ்ரீலங்கன் எயார்லைன்சுக்கான காட்சி கூடத்தினை இலங்கை விமானப்போக்குவரத்து அமைச்சர் ரெஜினோல்ட் கூரே திறந்து வைத்தார். பிரதம அதிதியாக கலந்து கொண்ட உல்லாச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக இலங்கை காட்சி கூடத்துக்கு விசேடமாக வருகை தந்து இலங்கையில் இருந்து வந்த உல்லாசக் கம்பனிகளை சந்தித்து ஊக்குவித்ததோடு , இலங்கைப்பிரதித் தூதுவர் அப்துல் றஹீம் அவர்களினால் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.

dubai (3)

இதன்போது இலங்கை பிரதித் தூதுவராலயம் பத்திரிகை மாநாடு ஒன்றினையும் ஏற்பாடு செய்து இருந்தது . இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் இலங்கை உல்லாச பிரயாணத்துறை அபிவிருத்திகளை கண்டுவருவதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையின் உல்லாசத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் அதற்க்கான வாய்ப்புக்கள் என்பன இலங்கை அதிகாரிகளினால் பத்திரிகையாளர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டது.

dubai (2)

மிகவும் அலங்காரமாக கண்ணை கவரும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இலங்கை காட்சிக்கூடம் வெளிநாட்டவர் , அரேபியர் என பலரையும் கவர்ந்ததோடு கோடைக்கால விடுமுறைக்காக பலரும் இலங்கை வர விருப்பம் தெரிவித்தனர்.

dubai

Published by

Leave a comment