காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெற்று வந்த பற்சிகிச்சைப் பிரிவு தற்போது நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இன்று முதல் சிறந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி வருகின்றது.
வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்கள் மட்டக்களப்பு சுகாதார திணைக்கள உயிரியல் மருத்துவ பொறியியல் பகுதியுடன் மேற்கொண்ட அயராத முயற்சியின் கீழ் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கான சேவைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே காத்தான்குடி தள வைத்தியசாலையின் பற்சிகிச்சைப் பிரிவில் இரண்டு பற்சிகிச்சைக்கான கதிரைகளுடன் சேவைகள் நடைபெற்றுவருவதாகவும் அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைகளை நாடி வரும் நோயாளர்களின் வசதி கருதி இன்னுமொரு பற்சிகிச்சை பிரிவுக்கான கதிரை சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கவிருப்பதாகவும் எமது வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
Published by



Leave a comment