மன்னார்: அன்றொரு காலம் இருந்தது, வடக்கில் இனவாத சக்திகள் முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராக விரட்டிக் கொண்டிருந்த வரலாற்றை நாம் அறிவோம். இதே போல் இன்று பெரும்பான்மையினரின் ஊடகங்களான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி என்பன அந்த பணியினை செய்ய ஆரம்பித்துள்ளது.
காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடியும்,பொல்லடியும் என்று ஊர் வழக்கில் பேசுவார்கள். அந்த பேச்சின் ஆழத்தையும் நாம் அறியாமல் இல்லை. இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்டார்கள். இந்த வெளியேற்றம் 24 மணித்தியாலயங்களுக்குள் இடம் பெற்றதொன்று.தாம் பிறந்து வாழ்ந்த தமதுயிர் மண்ணினை விட்டு உடுத்திய உடையுடனும், எதனையும் எடுத்துக் கொள்ளக் கூட முடியாத நிலையில் முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்ட காலத்தை நாம் ஒரு போதும் மறந்து செயற்பட முடியாது.
இந்த இறந்த காலத்தில் இருந்து நாம் எமது எதிர்காலத்தினை நோக்க வேண்டியது அவசியமாகும்.ஒரு சமூகம் தமது வரலாற்றினை மறந்துவிடும் என்றால் இந்டத சமூகத்திற்கு எதிர்காலம் என்பது வெறும் கானல் நீராகத்தான் இருக்கும் என்பதும் யதார்த்தமாகும்.
எமது மக்களின் மக்களின் வெளியேற்றத்தின் பின்னர் எதிர் கொண்ட பிரச்சினைகளும், எதிர் பார்ப்புக்களும் எண்ணிடலங்கதாவை, இந்த எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்ள நாம் பட்ட துன்பங்களும், துயரங்களும் இன்றும் பசு மரத்தாணி போல் கண்முன் நிற்கத்தான் செய்கின்றது. எமது பலத்தால் அரசியல் பிரவேசம் எடுத்தவர்கள் ஆற்றிய பணிகளை நாம் மறந்து பேச முடியாது. அவர்கள் அவர்களது சக்திக்கேற்ப பணி செய்தார்கள்.அது அவர்கள் குறைகளல்ல.
அது போல் இன்றும் எமது அரசியல் தலைமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளும், முறியடிப்புக்களும எண்ணிடலடங்காதவை இவற்றை எதிர்கொள்வது என்பது இறைவனின் புறத்தில் இருந்து வருகின்ற பாதுகாப்பும், துாய்மையான எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் தான் வெற்றிக் கொள்ள முடியும் என்பது எமது கணிப்பீடாகும். அந்த வகையில் கடந்த 20 வருடகாலமாக வடக்கு முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டார்கள் என்று கூறுவதை விட இவர்கள் இழந்தது தான் ஏராளம் என்று சொல்வது பொருத்தமாகும். தம்மிடம் இருந்த அனைத்து செல்வங்களையும் இழந்து வலுவிழந்து போன வடமாகாண முஸ்லிம் சமூகம் தமது முயற்சியின் பலனாக நல்ல பல அடைவுகளை சந்தித்துள்ளார்கள் என்பது உண்மையாகும். இருந்த போது 90 சதவீதமான மக்கள் இன்னும் வறுமையிலும், தாம் இழந்தவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாத அளவில் இருக்கின்றார்கள்.
தமது அரசியல் பலம் இதனை பெற்றுக் கொடுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அந்த பதவிகளை அலங்கரிக்கும் நபர்களின் பெறுமானம் சமூகத்தின் அழிவுக்கு தான் முதலீடாக மாறியுள்ளதையும் தற்போது கண்டு கொண்டிருக்கின்றோம். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போது இன்று அதற்கு எதிராக சிங்கள ஊடகங்கள் கடும் போக்கு சினத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினந்தோறும் வெளிவாரும் நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள் இந்த தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இவர்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி மீண்டும் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்ற இனவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளதை தெளிவாக காணமுடிகின்றது.
சிங்கள தொலைக்காட்சியான ஹிருவில் மாந்தை மேற்கு பெரியமடு கிராமத்தில் உள்ள காடுகள் அரசியல் வாதியொருவரினால் அழிக்கப்படுவதாகவும், இந்த மரங்கள் வியாபாரம் செய்யப்படுவதான ஒளி பரப்பு செய்தது. இதனையடுத்து பெரிய மடு மக்கள் இது தொடர்பில் தமது கடுமையான அதிருப்தியினை வெளியிட்டனர். ஒரு வெள்ளை வேனில் வந்த சிலர் தாங்கள் கோழி பண்ணையொன்றை அமைக்க 10 ஏக்கர் காணி தேவையென்று அங்குள்ள மக்களிடம் கேட்டுள்ளனர். இங்கு காணிகள் அவ்வாறு விரும்பியவாறு வழங்கப்படுவதில்லை. கிராமத்தில் இதற்கு பொறுப்பான குழுவொன்று அவர்களிடம் சென்று பேசுங்கள் என்று பெரியமடு கிராமவாசியொருவர் தெரிவித்துள்ளார். வாகனத்துக்குள் மறைந்திருந்த கெமரா காரர் ஒருவர் இதனை வீடியோ செய்துள்ளார். வந்த ஊடக ஆசாமிகள் இந்த காணிகளை உங்களுக்கு பெற்றுத் தந்தது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என கூற, மீண்டும் மீண்டும் தேவையற்ற கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துள்ளார். இதில் சந்தேகம் கொண்ட கிராமவாசி புரிந்து கொண்டார். இந்த ஆசாமிகள் எமக்கு அநியாயம் இழைக்க வந்தவர்கள் என, இதனையும் ஆசாமி புரிந்து கொண்டார் கிராமவாசிக்கு நாம் வந்த நோக்கம் தெரிந்துவிட்டது என்று, ஊடக ஆசாமிகள் அங்கிருந்து உடனே திரும்பிவிட்டனர்.
இந் நிலையில் இதரைன வைத்துக் கொண்டு காணிகள் அழிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவருகின்றனர். பெரியமடு மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் பேசாத இந்த ஊடகங்கள் இந்த மக்களுக்கு கிடைக்கவுள்ள அரை ஏக்கர் காணியினை பறிக்கும் வேலையினை செய்கின்றனர். துரத்தப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்தில் இருந்து மீண்டும் தமது ஊருக்கு வந்த போது இங்கிருந்த வீடுகள் அழிக்கப்பட்டும், ஏனைய சொத்துக்கள் சூறையாடப்பட்டும், விளை நிலங்கள் காடுகளாக காணப்பட்டது. இந்த நிலையில் மீள்குடியேறிய மக்களுக்கான வீடுகளை அமைத்துக் கொள்ள தேவையான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டன. இந்த காணிகள் உரிய முறையில் அரசாங்கத்தின் காணி சட்டதிட்டங்களுக்கு அமைய விடுவிக்கப்பட்டதாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினரான முஹம்மத் நவ்பில் கூறினார், இந்த ஹிரு தொலைக்காட்சி எம்மிடம் வந்து ஏன் கேள்விகளை கேட்கவில்லை என கேள்வி தொடுத்துள்ள இவர், தேவையான ஆவணங்கள் எம்மிடம் இருப்பதாகவம் கூறியுள்ளார்.
இலங்கையில் எத்தனையோ முறைகோடுகளும், கடத்தல்களும், கொலைகளும், போதை பொருள் விற்பனைகளும் சமூக சீர்கேட்டுக்கு வழி அமைத்து கொடுத்துவருகின்றது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பேசப்பட்ட பிரபலமாண ஒருவரை குற்றமற்றவர் என்று காட்டி அவரது பெறுமதி இல்லாத சேவைகளை பாரிய சேவையாக காட்டி ஊடக தர்மம் நடத்தும் ஊடகங்கள் வடக்கில் பயங்கரவாதிகளினால் அனைத்தையும் இழந்த எமக்கு எதையும் பெற்றுத் தர வக்கற்றவர்களாக இருந்து கொண்டு எமக்கு பணி செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சேவைக்கு மாசுகற்பித்து, அவரது பணிகளை எமக்கு கிடைக்கவிடாமல் செய்யும் அசிங்கத்தனமான வேலையினை இந்த தொலைக்காட்சி செய்ய ஆரம்பித்துள்ளதா ? ஊடக தர்மம் என நாம் கேட்கின்றோம்
அந்த வகைியல் முஸ்லிம், தமிழ் கிராமங்களுக்கு நுழையும் இவ்வாறான ஆசாமிகள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இந்த சீ.ஜ.ஏக்கல் யாருடைய ஏஜெண்டுகள் என்பைதையும், இவர்களது நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டு எமது மக்கள் விழிப்புடனும், அவதானத்துடனும் இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.
எம்மில் இருந்து பறிப்பது இலகு. அதனை நாம் அடைந்து கொள்வது சிரமம்இசமூகத்தில் எமது பெயர் தாங்கியவர்கள் எமது அரசியல் தலைமைத்துவத்தை அழிக்க மேற்கொண்டுள்ள பயணத்தின் மற்றுமொரு அரங்கேற்றம் தான் இது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அற்ப சொற்ப லாபங்களுக்காக இந்த நன்றி மறந்தவர்களுடன் கைகோர்போமெனில் அது எம்மை அழிவில் இட்டுவிடும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றேன்.
Published by

Leave a comment