பைரூஸ் ஹாஜியின் வரலாறு படைத்த மேதினமும் திரண்டெழுந்த மக்கள் வெள்ளமும்

unnamedஅஹமட் இர்சாத்

கொழும்பு: நேற்று முந்தினம் வெள்ளிக் கிழமை 01.05.2015 கொழும்பு கெம்பல் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின ஊர்வள கூட்டத்துக்கு பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்திருந்தமையானது 1976ம் ஆண்டுக்கு பிற்பாடு வரலாற்று சாதனை படைத்த மேதின ஊர்வளமாக ஐக்கிய தேசியக்க கட்சியின் வரலாற்றில் எழுதப்படும் என்பதில் மாற்றுக்கருத்திக்க இடமில்லை.

இவ்வூர்வளத்தின் தனது பங்கினையும் மத்திய கொழும்பானது ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய கோட்டையாக கதுதப்படும் அதே நேரத்தில் 1976ம் ஆண்டு வரலாறு படைத்த மேதின ஊர்வளத்தை நடாத்திய முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரமாதாசாவின் சொந்த பிறப்பிடம் என்பதனால் இன்னும் இவ்வூர்வளத்தினை சிறப்பாக செய்ய வேண்டும் என மேல் மாகாண சபை உருப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்புக்கான பிரதான அமைப்பாளர் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாடானது மிக முக்கியமாக அமையப்பெறிருந்தது.

பகல் ஒரு மணிக்கு பைரூஸ் ஹாஜியின் பிரதான அரசியல் காரியாலையம் இருக்கும் புதுக்கடையில் இருந்து பிரமாண்டமான முறையில் ஆரம்பமான மேதின ஊர்வளத்தில் கணக்கில் எடுக்க முடியாதளவிற்க்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டு பைரூஸ் ஹாஜியின் கரத்தினை பலப்படுத்தியதோடு வருகின்ற பாராளுமன்ற தேதலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியையும் உறுதி செய்தனர்.

அத்தோடு மத்திய கொழும்பில் இருந்து பைரூஸ் ஹாஜியின் தலைமையில் ஆரம்பமான மேதின ஊர்வளத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உருப்பினர்களான இக்பால் ஹாஜி, விக்னேஸ்வரன், பாஹிம், அப்துர் ரஃமான், ரிபாய் பதுர்டீன்இ பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பைரூஸ் ஹாஜிக்கு ஒத்துளைப்பு வழங்கியிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment