சாய்ந்தமருது: சாய்ந்தமருது தோணா 3 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபைக்குட்டபட்ட சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அதன் செயற்பாட்டுப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்ட அபிவிருத்தி வேலைகள் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
Published by


Leave a comment