காத்தான்குடி: காத்தான்குடி ஆட்டோ சாரதிகள் சங்கம் நடத்திய மே தின ஊவலம் மற்றும் கூட்டம் என்பன நேற்று (01.05.2015) இடம்பெற்றது.
காத்தான்குடி போலிஸ் நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமான மே தின ஊர்வலம் கடற்கரை வீதியில் அமைந்திருக்கும் ஆட்டோ சாரதிகள் சங்க காரியாலயத்தின் முன்னால் நிறைவுற்று காரியாலயத்தில் மே தின கூட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்கள் விஷேட அதிதியாகக் கலந்துகொண்டதுடன் NFGGயின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM. மிஹ்ழார், ஐ.தே.க.யின் காத்தான்குடி அமைப்பாளர் HMM. முஸ்தபா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் MIM. இர்பான் உள்ளிட்ட ஆட்டோ சாரதிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் MIM. இர்பான் அவர்களால் ஒலிபெருக்கி சாதனங்களும் ஆட்டோ சாரதிகள் சங்கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதுடன் விபத்து ஒன்றில் தனது ஒரு கையினை இழந்த ஆட்டோ சாரதி ஒருவருக்கும் நிதியுதவி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை ஆட்டோ சாரதிகள் சங்கம் நடாத்திவருகின்ற சிக்கனக் கடன் உதவி வேலைத்திட்டத்திற்கு NFGG நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் அதன் தவிசாளர் MM. அப்துர் ரஹ்மான் இங்கு உரையாற்றும்போது உறுதியளித்தார்.
Published by

Leave a comment