இறம்பொடை: கொத்மலை இறம்பொடை நகரத்தில் நேற்று இரவு 7.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கடை ஒன்று முற்றாக சேதமானதுடன் பகுதி அளவில் 2 கடைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இறுதி நேரத்தில் நுவரெலியா மாநகர சபையின் தீயனைக்கும் பிரிவின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
பாதிப்புக்களின் பெறுமதி குறித்து இதுவரை கணக்கிடப்படாத நிலையில். தீக்கான காரணம் குறித்து கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் சந்தேகிக்கபடுகின்றது.
Published by


Leave a comment