அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க புத்திஜீவிகள் குழு உதயம்

unnamedதாய் நாடு

கொழும்பு: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது.

நாடு பூராவும் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.

அமைப்பின் தலைவராக ருகுணு பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் சேனாரட்ணவும், செயலாளராக சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரணவும், தேசிய அமைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நந்தன விஜேசிங்கவும் தெரிவாகி உள்ளார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்களை அமைப்பில் உள்வாங்க விசேட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றோர்களுக்கு தேசிய விவகாரங்களில் அழுத்தம் கொடுத்தல், பல்கலைக்கழக வளங்களை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்துதல், பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை தேசிய நலனுக்கு பயன்படுத்துதல் ஆகியன இவ்வமைப்பின் பிரதான இலட்சியங்கள் என்று தேசிய அமைப்பாளர் நந்தன விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளையும் இவ்வமைப்பு நேரில் சந்தித்து பேச்சுக்கள் நடத்தும் என்றும் இவர் கூறினார்.

Published by

Leave a comment