வாழைச்சேனை: வாழைச்சேனை பொது மக்களின் நலன் கருதி சிநேகபூர்வமான சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை மட்-ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய பிரதான மன்டபத்தில் இடம் பெற்றது.
சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கே.ஏ.டி.டி. குமாரபெலி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி TANB. திப்புட்டுமுனுவ, பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம்.நஸீர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், வைத்தியர்கள்,மதப்பெரியார்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்களை பதிவு செய்து கொள்ளல், திருமணப்பதிவு, பொலிஸ் முறைப்பாடு பிரதிவழங்கள் மற்றும் முறைப்பாடுகள் உடனுக்குடன் பதியப்பட்டு உடன் விசாரணைகளை நடாத்த விஷேட பொலிஸ் குழுவினரும் அங்கு ஏற்படுத்தப்பட்டிருத்ததுடன், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விளக்கங்கள், சுகாதார திணைக்களத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான விளக்கம் மற்றும் மட்டக்களப்பு தென்னை பயிர்ச் செய்கை சபையினால் தென்னை பயிர் வளர்ப்பின் போது ஏற்படும் பீடைத்தாக்கத்தில் இருத்து எவ்வாறு பயிர்களை பாதுகாத்து கொள்ளல் தொடர்பாகவும், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம் பெறும் துஷ்பிரயோக நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பிலும் பொது மக்களுக்கு விழிப்புட்டப்பட்டதுடன் சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
விசேடமாக குறும்பார்வை,நீள்பார்வை குறைபாடுகளுடைய நூற்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசேதனைகளின் பிற்பாடு பெறுமதிமிக்க மூக்கு கண்னாடிகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு இலவச அப்பியாச கொப்பிகளும் பொலிசாரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருத்தது பெரும் தொகையான இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி இருத்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment