வன்னி மாவட்ட முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்

vavuniyaவன்னிக் குரலான்

வவுனியா: என்னன்றி கொண்டவருக்கு உய்வுண்டாம் செய் நன்றி கொண்ட மகற்கு, இது ஒரு முதுமொழியாகும். இறைவன் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றான் இந்த இந்த உலகில் தனக்கு நன்றி செய்யும் ஒருவருக்கு அவன் இந்த உலகில் எவ்வாறு நன்றி செலுத்துவான் என்று அது போன்று தான் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன் இறைவனுக்கு நன்றி செலுத்தமாட்டான் என்ற நபி மொழியினை நாம் ஒவ்வொருவரும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் தான் பெற்றெடுத்து ஆளாக்கி பதவி பட்டங்களில் அமரச் செய்த பெற்றோர்களையே துாக்கி எரியும் களிகாலத்தில் இருக்கின்ற போது, தனக்கு எவர் உதவி செய்தாலும் என்ன அவரை காலால் மிதித்து வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அரசியல் தெரியாமல் இருந்தவரை அரசியலுக்கு முகவரி கொடுத்து பாராமளுமன்றத்துக்கு கொண்டு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீனை இந் பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தில் இருந்து இல்லாமல் துடிக்கும் ஹூனைஸ் பாருக் போன்றவர்களின் வரலாறு சரித்திரங்களாக எழுதப்பட  வேண்டும்.

ஒரு இலிகிதராக முஸ்லிம் சமய காலாசார திணைக்களத்தில் பணியாற்றி வன்னி மாவட்ட மக்களுக்கு ஏன் மன்னார் மாவட்ட மக்களுக்கு கூட தெரியாதவர் தான் ஹூனைஸ் பாருக், கடந்த பாராளுமன்ற தேர்தலில் எத்தனையோ செல்வாக்கும், பணம் பலம் கொண்டவர்கள் மன்னாரில் இருந்த போதும், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இந்த ஹூனைஸ் பாருக்கினை வேட்பாளராக போட்டமையானது. இவர் மீது அமைச்சர் கொண்டிருந்த நம்பிக்கையும், இவர் வேலை செய்த திணைக்களத்தின் பெயரும் என்பதை இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் முகம் தெரியதாத ஹூனைஸ் பாருக்கிற்கும் வக்களிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனின் வேண்டுகொளை ஏற்றுக்கொண்ட மக்கள் அதனை செய்ததன் விளைவாக அவரும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். வவுனியாவில் போட்டியிட்ட மௌலவி மஹ்ரூப் அவர்களுக்கும் ஹூனைஸ் பாருக்கிற்கும் இடையில் சில நுாறு வாக்குகள் தான் வித்தியாசமாகும். இல்லாதவிடத்து மௌலவி மஹ்ரூப் இன்று பாராளுமன்ற உறுப்பினராக மாறியிருப்பார். இறைவனின் நாட்டம் இன்றி எதுவும் அசைாயது என்ற ஈமானிய நம்பிக்கை முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும். அப்போது அவன் இறை விசுவாசியாகும். வெறுமனே தொலைக்காட்சியில் தோன்றி தான் மட்டும் தான் தகஜ்ஜத் தொழுது இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், தனது பிரார்த்தனைகளை மட்டுமே இறைவன் அங்கீகரிப்பதாக வெளிப்படையாக பிரசாரம் செய்வதானது இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்று என்பதை இஸ்லாத்தை கற்றதாக கூறும் ஹூனைஸ் பாருக் அண்மையக்காலமாக கூறிவருகின்றதில் இருந்து இவரது துாய்மை தெளிவாக தெரியவருகின்றது.

சந்தர்ப்பவாதிகள் இருக்கும் வரை முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கு எதிரான சதிகளும் இருக்கத் தான் செய்யும் என்பதற்காக ஹூனைஸ் பாருக் போன்றவர்கள் போதுமான ஆதாரங்களாகும். அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆதரவில், அவரின் தியாகத்தில் பாராளுமன்றம் வந்ந ஹூனைஸ் பாருக், இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் அவர் சார்ந்து நிற்கும் கட்சி சந்தர்ப்பம் வழங்கக்  கூடாது என்று பேசாலை கோயில் ஒன்றில் வைத்து இடம் பெற்ற கட்சியின் சிலர் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாக வெளியிட்டுள்ள செய்தியினை பார்க்க முடிகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக வந்த ஹூனைஸ் பாருக் இந்த வன்னி மாவட்ட மக்களுக்கு எதனை செய்துள்ளார் என்பது மக்களது கேள்வியாகும். அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் சிபாரிசில் சில பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி குழு தலைவராக கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டார். குறிப்பாக இவர் சார்ந்த முசலி பிரதேச செயலகப் பிரிவிற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இங்கு இம்மக்களது தேவைகளுக்காக முயற்சிப்பதை விட தனது உறவுகளின் தேவை தொடர்பில் முசலி பிரதேச செயலாளர் திரு. கேதீஸ்வரனுடன் முரண்பட்டார். பிரதேச செயலாளரை பல முறை அச்சுறுத்திய போதும், அதற்கு அவர் பயப்படவில்லை. அதிகார துஷ்பிரயோகத்துக்கு இடம் கொடுக்காத அவரை மாற்றுவதற்கு இந்த ஹூனைஸ் பாருக் எத்தனையோ வகையான முயற்சிகளை செய்தார். தமது கட்சியின் தலைவர் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு கூட தெரியாமல் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் தான் தன்னை அனுப்பியதாகவும் மேற்குறிப்பிட்ட பிரதேச செயலாளரை மாற்றுமாறும் கோறியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு திருகு தாளங்களை செய்த போதும், அது இடம் பெறவில்லை. இந்த ஆத்திரம் தனது பதவியினை வைத்துக் கொண்டு அதிகாரிகளை அச்சுறுத்த முடியாத நிலையேற்பட்டதால் ஆவேசம் கொண்டதன் விளைவாக அமைச்சருக்கும் அவரு குடும்பத்தினருக்கும் எதிராக பல்வேறு தேவையற்ற கதைகளை பரப்பலானார். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர் தான் ஹூனைஸ் பாருக் என்பதை கூறி வைக்கவிரும்புகின்றேன்.

மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு வன்னியிலும், இலங்கையிலும் முழு வீச்சுடன் செயற்பட்டவர் அமைச்சர் றிசாத் என்பைதை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்மின் அமைச்சர்கள் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற போது, ஹூனைஸ் பாருக் தலைமை தாங்கி மன்னாரில் கூட்டம் நடத்தி பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம். அமைச்சர் றிசாத் பதியுதீனின் கட்சியுடன் கூட்டு சேர வேண்டாம் என்று.வங்குரோத்து அரசியல்வாதியின் அவலத்தை இதன் மூலம் காணமுடிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அனைத்து சிறுபான்மை கட்சிகளினையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை முகம் கொடுக்க தயாராகிவருகின்ற நிலையில் வன்னியில் ஜக்கிய தேசிய கட்சியின் பிரதி நிதித்துவம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஹூஸை் பாருக் செயற்படுவதன் பின்னணி தொடர்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அப்பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹூனைஸ் பாருக் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்வாங்கப்பட்ட தினத்தில் இருந்து அவர் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பளார் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும்இஅவர் செயற்பட்ட விதம் தொடர்பில் தலைமைத்துவத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கட்சி ஆதவாளர்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரதேசவாதத்தினை ஊட்டி இந்த அரசியல் செய்வது தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எப்படியாக இருந்தாலும் வன்னி மாவட்ட முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் வரக் கூடாது என்பதை ஹூபைஸ் பாருக் தெரிவித்துவருவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தான் ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லையென்றும் அதே போல் வன்னியில் றிசாத் பதியுதீனையும் வெற்றி பெற விடமாட்டேன் என சூளுரைவிடுத்துவருவது தொடர்பில் மக்கள் விழிப்படைய வேண்டும்.

Published by

Leave a comment