மட்டு. கல்குடா பிரதேசத்தில் முதல் முறையாக சிறப்பாக கொண்டாப்பட்ட மே தின நிகழ்வு

unnamed2எம்.ரீ.எம்.பாரிஸ்

கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி பிரதேசத்தில் வரலாற்றில் முதல் தடவையாக மிகச் சிறப்பான முறையில் மே தினம் கொண்டாப்பட்டது. அதனையொட்டி உழைக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (01) இடம் பெற்றது.

கல்குடா பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்ட தேவையுடைய  ஏழைத்தொழிளார்களை கௌரவித்து அவர்களுக்கான புத்தாடைகள், விவசாய தொழில் உபகரணங்கள் உள்ளிட்ட பரிசுப்பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டது.

விசேடமாக கடின உழைப்பாளிகளான பிரதேசத்தின் சுற்று புற சூழலை சுத்தமாக வைத்திருக்க அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பிரதேச சபைகளின் துப்பரவு பணியாளர்கள் (வீதித்தொழிலாளர்கள்) கௌரவிக்கப்பட்டதுடன் நோய் கிருமி தாக்கங்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான பாதுகாப்பு காலணிகள்,கையுறைகள் ஆகியனவும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின், கிம்மா நிறுவனத்தின் ஆலோசகர்களான வாழைச்சேனை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி பீ.எம்.பிர்னாஸ், சட்டதரணி எஸ்.எம்.எம். அமீன், ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.காதர், மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.கனீபா பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment