வாழைச்சேனை: அல் – கிம்மா நிறுவனத்தினால் குறும்பார்வை, நீள்பார்வை குறைபாடுகளுடைய நூற்றுக்கு மேற்பட்ட நபா்களுக்கு கண் பரிசேதனைகளின் பிற்பாடு பெறுமதிமிக்க மூக்கு கண்னாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளா் எச்.எம். ஜாபிர் இதன் போது கலந்து கொண்டு தன் கைகளினால் மூக்கு கண்னாடிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு – வாழைச்சேனை பொது மக்களின் நலன் கருதி சிநேக பூர்வமான சேவையினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை கடந்த 28.04.2015 செவ்வாய்க்கிழமை ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய பிரதான மன்டபத்தில் இடம் பெற்றமை விசேட அம்சமாகும்.
Published by



Leave a comment