காத்தான்குடி: காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலை) 2014 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (28.04.2015 செவ்வாய்) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் எம்.சீ.எம்.ஏ சத்தார் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஜ.சேகுஅலி அவர்கள் கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கோட்டக்கல்வி அதிகாரி எம்.இஸ்ஸதீன், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீஎம்.பதுர்தீன், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனா்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை 2014 என்பவற்றில் அதிகூடிய புள்ளிளைப் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அதிதிகளால் பதக்கம் அணிவித்து பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Published by



Leave a comment