மூதூர்: மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல்மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாவலடிச் சந்தியில் நேற்று வியாழக் கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மூதூர் பீஸ் ஹோம் மற்றும் கிறீன் ரின்கோ ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களோடு பொது மக்களும் இணைந்து ஈடுபட்டனர்.
சம்பூர் அனல் மின்சார நிலையத்திற்கான காணியில் சுற்றுவேலி அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிக்கு எதிப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. சம்பூர் அனல் மின்சார நிலையம் சம்பந்தமாக அன்மையில் சூழல்தாக்க அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மக்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வந்த நிலையில் அதனை கவனத்திற்கொள்ளாது சுற்றுவேலி அமைப்பதற்கு கேள்வி மனு கோரப்பட்டுள்ளது.
இக்கேள்வி மனுத்தொடர்பில் கடற்கரைச்சேனை பகுதியில் ஒப்பந்தக்காரர்களோடு ரி.பி.சி லிமிடெட் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் இத்திட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லையெனில் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்தும் முன்னெடுக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment