கொழும்பு: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட குழுவினர் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு கொழும்புத் துறைமுகத்தில் 10 ஏக்கர் நிலத்தை கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைக்காக தனியார் துறைக்கு கையளித்த முறை பிழையானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தபோதிலும் பல ஆண்டுகளாக சட்டமா அதிபர், இரகசிய பொலீஸார் மற்றும் இலஞ்ச ஆணையாளர் இது சம்பந்தமாக இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் இன்று (30) இலஞ்ச ஆணைக்குழுவுக்கு நினைவூட்டினர்.
தான் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கு அமைவாக அக் கொடுக்கல் வாங்கல் சட்டவிரோதமானதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அதற்கமைவாக ஜோன் கீல்ஸ் நிறுவனத்திடமிருந்து குறித்த காணியினை மீளப் பெறுமாறும் பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது எனினும் தவறிழைத்தவர்களுக்கு இது வரை தண்டனை வழங்கப்படவில்லை எனவும் இது உச்சநீதிமன்ற தீர்பபை மீறும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.
Published by

Leave a comment