சிறுநீர் அருந்தி இடிபாடுகளில் சிக்கியவரின் 82 மணிநேர ஜீவமரணப் போராட்டம்

nepalகட்மாண்டு: நேபாள பூகம்பத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 82 மணிநேரம் தவித்த ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார்.ரிஷி கனால் என்ற இவர் காட்மாண்டுவில் தங்கியிருந்த ஹோட்டல் இடிந்து விழுந்து அந்த இடிபாடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கினார். மீட்கப்படுவதற்காக இடிபாடுகளில் சிக்கியிருந்த நேரம் தனது சிறுநீரைக் குடித்து உயிரைத் தக்கவைத்துகொள்ள நேரிட்டதாக இவர் கூறினார்.

இடிபாடுகளில் அவரது கால் சிக்கிக் கொண்ட நிலையில் அவரால் தனது மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி தனது உறவினர்களை அழைக்க முடிந்தது.

nepal

ஆனால் துரதிருஷ்டவசமாக, அவரால் அவர் தங்கியிருந்த ஹோட்டல் பெயரை நினைவில் வைத்திருக்க முடியவில்லை. அவர் துபாய்க்குச் சென்று வேலையில் சேர்வதற்கு முன்னர் இந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார்.இவரை கடைசியாக நேபாள மற்றும் பிரெஞ்சு அவசர சேவை ஊழியர்கள் காப்பாற்றினர்.

Published by

Leave a comment