புருவங்கள் அழகுபடுத்துவதை நிறுத்த எச்சரிக்கிறது ஈரான்

iran saloonதெஹ்ரான்: ஈரானில் ஆடவருக்கு புருவத்தை அழகு படுத்துவதை முடி திருத்துவோர் நிறுத்த வேண்டும் எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆடவர் மற்றும் மகளிரிடம் புருவத்தை திருத்தி அழகு செய்துகொள்வது அங்கு கூடுதலாக பிரபலமடைந்துவரும் வேளையில், இது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று முடிதிருத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கண் இமையிலுள்ள முடிகளை வெட்டி ஒழுங்குபடுத்த வேண்டாம் எனவும் அந்தச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி முடி திருத்துவோர் ஆடவருக்கு பச்சை குத்தும் வேலையையும் நிறுத்தும்படி கூறப்பட்டுள்ளது.

iran saloon

உடலிலிருந்து முடியை நீக்குவது, கவர்ச்சிகரமாக வகையில் முடியை வெட்டுவது ஆகியவை மிகவும் நாகரீகமானது, அவை மேற்குலக கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது என்று கூறும் அதிகாரிகள் அவ்வகையில் ஆடவர்கள் அழகு செய்து கொள்வதை முற்றாக ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Published by

Leave a comment