கொழும்பு: நகைச்சுவைகளைப் பார்த்துக் கொண்டு காலம் கழிக்கும் நிலையே தற்போது எமது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியொருவருக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியிருப்பதும் புதிய அரசாங்கமொன்றை அமைத்திருப்பதும் நாடகம் பார்த்து ரசிப்பதற்கல்ல. அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அவ்வெதிர்பார்ப்புகளுள் பிரதானமானது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினை மாற்றி நல்லாட்சியை ஏற்படுத்துவதாகும்.
ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் என்பன இரண்டாம், மூன்றாம் எதிர்பார்ப்புகளாக உள்ளன. நிறைவேற்றப்படாததும் இன்று இல்லை நாளை என காலம் செல்வதும் முதலாவது கூறப்பட்ட எதிர்பார்பிற்காகும். அதாவது நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினை மாற்றி நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகும்.
நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைக்கும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நிச்சயமற்ற தன்மையில் காணப்படுகின்றது. அரசாங்கம் இந்தப் பிரேரணையை கொண்டு வந்த ஆரம்ப காலத்தில் அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு இதற்குக் கிடைத்திருந்தது. வரைவு தயாரிக்கப்பட்ட தினம் தொடக்கம் இந்த சட்டம் மூலம் சவாலுக்குட்படுத்தப்பட்டது. சட்டம் மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், விவாதம் நடாத்துதல், சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளல், கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடாத்துதல் போன்ற அனைத்தும் குழப்பம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. 20ஆம் திகதிய விவாதம் 21ஆந் திகதிக்கு பிற்போடப்பட்டது. 21ஆம் திகதிய விவாதம் வேறு அரசியல் காரணங்களால் பின்தள்ளிப்போனது. தற்போது இவ் விவாதம் 27 மற்றும் 28ஆந் திகதிகளுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இச் சந்தர்ப்பத்தில் முக்கியமான அறிவுரையொன்றை வழங்கவேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுள்ளது மக்களின் தீர்மானத்திற்கு அமைவாகவேயாகும். அந்தத் தோல்வியினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு அரசாங்கத்திற்கு சுதந்திரமாக அதனது அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும். மக்களை குழப்பமடையச் செய்வதோ, அரசியல் கண்காட்சிகளை நடத்துவதோ இந்த சந்தர்ப்பத்தில் செய்யக் கூடாது,
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாகும். இதனை மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் எதிர்க்கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும். இம்முறை விவாதம் பிற்போடப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட குழப்பமே காரணமாகும்,
அரசாங்கமும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடாமல் இருப்பது முக்கியமானதாகும். எனினும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்ததனை அரசியல் பழிவாங்கலாகக் கருத முடியாது. அது சட்டரீதியானதும் நியாயமானதுமான செயற்பாடு என பெரும்பாலானோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் அலைக்கு ஏதேனும் அரசியல் கண்காட்சியொன்றினை நடாத்தி தனது பலத்தினை வெளிக்காட்டும் அவசியம் இருக்கிறதென்பது தெரியவருவது. அதற்குத் தேவையான பின்னணியினையும் தேவையினையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது என்றால் அது பிழையாகாது. அரசாங்கத்தின் அதிகாரிகள் அறிவுள்ளவர்காக இருந்தால் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்திற்கொண்டிருக்க முடியும்.
தற்போது அரசாங்கத்தின் நூறு நாள் பூரணமடைந்துள்ளது. சில குழப்பகரமான பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொருட்களின் விலை குறைந்துள்ளமை, எரிபொருள் விலை குறைந்துள்ளமை, சம்பள அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு நேரடி தீர்வு வழங்கப்பட்டுள்ளது. மறுபுறமாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா அவர்களுக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷpராணி பண்டார நாயக்க அவர்களுக்கும் நியாயம் கிடைத்துள்ளது. அரசியல் பழிவாங்கல்களுக்குட்பட்ட பெருமளவிலான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு நியாயம் கிடைத்து வருகின்றது. நாட்டின் ஊடகங்கள் அரசாங்கத்தின் அழுத்தங்களின்றி சுதந்திரமாக செயற்படுகின்றது. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. சட்டம் நியாயமான முறையில் செயற்படவுள்ளது. சமூக அமைப்புகளுக்கு தமது செயற்பாடுகளை இடையூறுகளின்றி மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளிடையே பிரதானமான இடத்தை வகிப்பது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிப் பதவிiயின் அதிகாரங்களை குறைத்து புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதாகும். சாதாரண மக்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் தெரியாதிருக்க முடியும். எனினும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையிலுள்ளவை தொடர்பில் சிறியோர் பெரியோர் அனைவரும் அறிவர். மக்கள் புதிய அரசியல் மாற்றத்தை எதிர்பார்கின்றனர் எனவும் அந்த மாற்றத்திற்கு அடிப்படையான நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரத்தை குறைப்பதற்கு வாக்கினை பயன்படுத்தியுள்ளார்கள் என்பததையும் ஜனாதிபதியும் அதேபோன்று அரசாங்கமும் நன்றாக ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் தாமதம் மற்றும் வினைத்திறனின்மை காரணமாக இந்த சட்டத்தினை அங்கீகரிக்கும் செயற்பாடு தாமதமாகியுள்ளதென்றும் இந்தத் தாமதத்தினால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்பது எமது நம்பிக்கையாகும்.
எமது அரசியல் இன்னும் முன்னேற்றமடையாத நிலையிலேயே காணப்படுகின்றது. எதிர்க்கட்சியும் தோல்வியுற்ற அரசியல்வாதிகளும் தமது கொரவத்தை பாதுகாத்துக்கொண்டு அரசியல் கனவான்களாக செயற்படுவதற்கு தெரியாதவர்களாக உள்ளனர். இவர்கள் அவ்வப்போது சட்டத்தை மீறுகின்றனர். மக்களை குழப்புகின்றனர். ஊடக கண்காட்சிகளை நடாத்துகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்டியில் வைத்து தமது ஆட்கள் மீது அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார், இவ்வாறான உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் மக்களை தவறாக வழிநாடத்தக் கூடியவை. ஊழலில் ஈடுபட்ட நபர்கள் சட்டத்தின் முன்னால் கொண்டு வரப்படுவது அரசியல் பழிவாங்கலா? குற்றம்சாட்டப்பட்ட நபர்களை ஆணைக்குழுவுக்குக் கொண்டு வருவது அரசியல் பழிவாங்கலா? சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராவது பழிவாங்கலாவது எவ்வாறு? தற்போது நடைபெறுவது அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் எதிராக ஊடகக் கண்காட்சியை நடத்துவதைத் தவிர அறிவுபூர்வமான அரசியல் பயணமல்ல.
அரசாங்கமும் அதேபோன்று எதிர்க்கட்சியும் இச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இரு தரப்பினருக்கும் முக்கியமான விடயங்கள் இரண்டினை குறிப்பிட விரும்புகின்றோம். முதலாவது இந்த இரு அரசியல் செயற்பாடுகளும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அறிவுபூர்வமாகச் சிந்தித்து நகைச்சுவையான செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்பதாகும். இரண்டாவதாக நாட்டின் பொருளாதாரத்தை தளம்பலடையச் செய்யாது உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும். இவ்விரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கும் அதேபோன்று எதிர்க்கட்சிக்கும் சிறந்த அரசியல் பண்புகள் அவசியமாகும்
தினமின ஆசிரியர் தலையங்கம் 23.04.2015
தமிழாக்கம் : எம்.ஐ.அப்துல் நஸார்
Published by

Leave a comment