காத்மண்டு: நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவிலிருந்து சுமார் 50 மைல் தூரத்தில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிலநடுக்கம் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
100ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Published by

Leave a comment