காத்தான்குடி சம்மேளன கல்விக்குழுவின் காத்திரமான பணிகள் தொடர்கின்றது

federation– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளன கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு (21.04.2015) செவ்வாய்)சம்மேளன அஷ்-ஷஹீட் அஹமட்லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் சட்டத்தரணி ஏ.எல்.ஏ.அப்துல்ஜவாத் தலைமையில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 30 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் போது சம்மேளன குழுவின் உறுப்பினர்களான யூ.எல்.எம்.என்.முபீன்,அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.சபீல்(நழீமி),மட்டக்களப்பு மத்தி பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.பதுர்தீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

federation

நிகழ்வின் போது அஷ்ஷெய்ஹ் எம்.எம்.அன்சார்(நழீமி)SLAS அவர்களின் விசேட உரை (பிரசன்டேசன்) ‘இலக்கு ஓர் இஸ்லாமியப் பார்வை’ (MISSION AND ISLAMIC VIEW) எனும் கருப் பொருளில் இடம்பெற்றது.

அதிபர் பதவி என்பது அமானிதமானது அந்த அமானிதத்தை நாம்

1. பொறுமை – PATIENCE
2. தொடர்ச்சியான முயற்சி – CONTINUOUS SELF
3. கலந்துரையாடல் – DISCUSSION
4. முன்மாதிரியும் நெர்த்தியும் – ROLE MODEL AND NEATNESS
5. தோடர்ச்சியான தேடல் – CONTINUOUS LERNING
6. உளத்தூய்மை – SINCERITY
7. நீதி – JUSTICE
8. சுயமரியாதையும் கௌரவமும் – SELF RESFECT AND DIGNITY
9. பணிவுத்தன்மை – HUMBLENESS
10. அன்பும் பனிவும் – LOVE AND CARE
11. தியாகமும் அர்பணிப்பும். – DEDICATION AND COMMITMENT

என்ற பன்புகளோடு அல்குர்ஆன்,ஹதீஸ்களின் வழிகாட்டல்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதனை தெளிவு படுத்தினார்.

federation (2)

காத்தான்குடி கல்விக்குழுவின் சமகால செயல்பாடுகளில் தங்களது காத்திரமான பங்களிப்பினை செய்து வரும் முன்னால் கிழக்கு மகாகண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் உட்பட ஏனைய அனைத்து கல்விக்குழு உறுப்பினர்களின் அர்பணிப்புடனான செயல்பாடுகளை கல்விமான்கள் பாராட்டினர்.

காத்தான்குடி சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.சபீல் (நழீமி) இன் முழுமையான நெறிப்படுத்தல்களுடன் நிகழ்வு இடம் பெற்றது

பாடசாலைகள் தொடர்பில் அதிபர்கள் எதிர் நோக்கும் சவால்கள் பிரச்சினைகளை முன்று வகைப்படுத்துவதாக அஷ்ஷெயஹ் ஏ.எல்.சபீல் (நழீமி) தெரிவித்தார்

1. கல்வியோடு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள்.
2. அடிப்படை பிரச்சினைகள்
3. சமூகம் சார் பிரச்சினைகள்.

இவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மிக விரைவின் சம்மேளன கல்விக் குழு நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

Published by

Leave a comment