ஆளும் எதிர் கட்சிகளின் தலைவராக ஜனாதிபதி மைத்திரி!

maithiri– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

கொழும்பு: எதிர்க்கட்சி பொது முன்னணி பொது வேட்பாளராக மைத்ரி தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரால் சிறுபான்மை அரசொன்றையே நிறுவ முடிந்தமையால் நூறு நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன் கொண்டு செல்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அன்றைய ஆளும் ஐக்கிய மக்கள் பொது முன்னணியில் இருந்து எதிர்க்கட்சி பொது அதிரடியாக அவர் வெளியேறினாலும் எதிர்பார்த்தபடி மகிந்த அரசின் ஆதரவாளர்கள் வெளியேறவில்லை.

என்றாலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இழுபறிகளுக்குப் பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியும், ஐக்கிய மக்கள் பொது முன்னணியினதும் தலைமைப்பதவி அவருக்கு வழங்கப்படுகின்றது.

இலங்கை வரலாற்றிலேயே அரசின் தலைவராகவும் எதிர்க்கட்சியின் தலைவராகவும் மைத்திரி மாறுகின்றார்.

அதிபர் மைத்ரி தனது நல்லாட்சி இலக்குகளை மையமாகக் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளவும், தான் வலிநாடத்துகின்ற கட்சிகளை எதிர் வரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யவுமாக பல நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்.

மார்ச் மாத இறுதியில் தற்பொழுது பாராளுமனறத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தனது கட்சிக் காரர்களுக்கு தேசிய அரசு என்ற பெயரில் அமைச்சரவை அமைச்சு, அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளை வழங்கி தனது அரசியலமைப்பு சீர்திருத்த பிரேரணைகளுக்கு ஆதரவு கோரினார்.
நிறைவேற்று அதிகாரத்தின் உச்சத்திலும், அரசாங்கத்திலும் இருந்த தங்களை நிர்க்கதியாக்கிவிட்ட தமது தற்போதைய தலைவர் ஜனாதிபதி எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்தியது மட்டுமல்லாமல் தனது அதிகாரங்களையும் மட்டுப்படுத்திக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமரை மென்மேலும் பலப்படுத்துவதாகவும் கட்சிக் காரர்கள் ஆதங்கப்படுகின்றார்கள்.

தற்போதைய விகிதாசாரத் தேர்தல் முறை ஐக்கிய தேசியக் கட்சியிற்கு சாதகமாக இருப்பதனால், விகிதாசார மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறையை அறிமுகம் செய்த பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் ஜனாதிபதியிற்கு நேருக்கு வாரங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசியலமைப்பின் மீதான 19 ஆவது சீர்திருத்தம் மாத்திரம் போதாது மாறாக தேர்தல் மோற மாற்றத்திற்கான 20 ஆவது சீர்திருத்தத்தையும் கொண்டுவருமாறு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் பலமான பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச அவர்களை களமிறக்குமாரும் ஒரு சாரார் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

Published by

Leave a comment