கொழும்பு: ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார்.அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பயணப்பட்டு வந்த EK 348, எமிரேட்ஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை வரவேற்கக் குழுமியிருந்ததால், விமான நிலைய உள் நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரை விசாரிக்கும் நிமித்தம் நாட்டுக்கு அழைத்து வர நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டதையடுத்து, சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த அவர் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் வைத்து பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த துறவிகள் அவருக்கு ஆசீர்வாதமும் வழங்கி அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment