மொடல் அழகிகள் இன்றி அரங்கேறிய சீன மோட்டார் கண்காட்சி!

car chinaஷங்கய்: சீனாவின் முன்னணி மோட்டார் கார் கண்காட்சி ஷங்கய் நகரில் தொடங்கியுள்ளது. ஆனால் பாரம்பரியமாக அரைகுறை ஆடைகளை அணிந்துவரும் மொடல் அழகிகள் யாரும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட நிர்வாண கோலத்திலேயே அந்தக் கண்காட்சியில் அரைகுறை ஆடைகளுடன் மொடல் அழகிகள் தோன்றுவதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் தடை விதித்துள்ளனர்.

வாகனங்களிலுள்ள வளைவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, கண்காட்சியில் ஒழுங்குமுறையான சூழல் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

car china
இம்முறை கார்களுக்கே முக்கியத்துவம்

உலகில் மிக அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்படும் நாடான சீனாவில், இந்த மோட்டார் கார் கண்காட்சியை லட்சக் கணக்கானவர்கள் பார்வையிடுவர். அங்கு காட்சிக்கு வைக்கப்படும் கார்களுக்கு இணையாக அதில் பங்கேற்கும் மொடல் அழகிகளும் ஈர்ப்பை ஏற்படுத்துவர்.

china car
இம்முறை மொடல் அழகிகள் தவிர்க்கப்பட்டுள்ளனர்

ஆனால் அண்மையக் காலங்களில் பாலியல் தொழிலை குறைக்காவும், இணையதளத்தில் ஆபாசப் படங்கள் உலவுவதை தடுக்கவும் சீன அரசு தனது நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமன்றி பொதுமக்கள் மத்தியில் தவறான கலாச்சாரப் பரவல் என்று அரசு கருதும் விஷயங்கள் மீதும் நடவடிக்கைகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Published by

Leave a comment