இலங்கை நிருவாக சேவை – நேர்முகப் பரீட்சைக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் வெளியீடு

Examஎம்.ஐ.அப்துல் நஸார்

கொழும்பு: பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 2014 செப்டம்பர் 27, 28 மற்றும் 2014 ஒக்டோபர் 04 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட எழுத்து மூலப் பரீடசையில் அனைத்து வினாத்தாள்களிலும் 50 வீத அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களுள் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்ற 215 பேர் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.  

சாதாரண நேர்முகப் பரீட்சை, கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை என இரு நேர்முகப் பரீட்சைகள் நடைவுள்ளதாகவும் இந்த நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படும் 172 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க நிருவாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகேயினால் வெளியிடப்பட்டுள்ள பெறுபேற்றுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment