21 ஆம் திகதி பஷில் வரு­கிறார்

Basil[1]கொழும்பு: ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் பொரு­ளா­தார அபிவிருத்தி அமைச்­ச­ரு­மான பஷில் ராஜபக்ஷ எதிர்­வரும் 21 ஆம் திகதி இலங்கை வர­வுள்­ள­தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்­க­னவே பஷில் ராஜ­பக்ஷ  எதிர்­வரும் 20 ஆம் திக­தி­ய­ளவில் இலங்கைக்கு வருகைதருவார் என்று அவரின் சட்­டத்­த­ரணி அண்­மையில் கடு­வலை நீதிமன்­றத்­துக்கு அறி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் 21 ஆம் திகதி பஷில் ராஜ­பக்ஷ இலங்கை வர­வுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்­றது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் பஷில் ராஜ­பக்ஷ அமெரிக்கா­வுக்கு சென்­றி­ருந்தார்.

அதன் பின்னர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்று மாதங்கள் விடு­முறை வழங்கப்பட­வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி. சில்வா கோரியிருந்தார்.

Published by

Leave a comment