துபாய்: துபாயில் உள்ள இலங்கைப் பிரதித்தூதுவராலயமும், இலங்கை கலாசார மன்றமும் இணைந்து சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை கடந்த 12.04.2015 அன்று லத்திபா மைதானத்தில் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்து இருந்தது.
இலங்கையின் கலாசார மரபுகளை பிரதிபலிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியினை துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் எம்.எம்.அப்துல் றஹீம் காலை 8.00 மணிக்கு சம்பிராய பூர்வமாக தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் இம்முறை விசேட சிறப்பு விருந்தினர்களாக அப்துர் றஹீம் அவர்களின் அழைப்பிற்கேற்ப அவுஸ்த்திரேலியா, இத்தாலி மற்றும் தாய்லாந்து பிரதி உயர் ஸ்தானிகர்களும் அவர்களின் துனைவியார்களும் கலந்து கொண்டனர்.
ஒரு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் துபாய் வாழ் இலங்கையர்கள் பலரும் தமது குடும்பத்தினர் சகிதம் வந்து கலந்து கொண்டனர். சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு மரபு போட்டிகளில் இலங்கை சிறுவர்கள் பெற்றோர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மற்றும் இலங்கையில் பண்டைய உணவுப் பொருட்கள் தயாரித்து காட்சிக்கு வைக்கப்பட்டதோடு கலாசார நிகழ்ச்சிகளை பலரும் கண்டு கழித்தனர்.
இம்முறை அதிகளவிலான வெளிநாட்டவர்களும் வருகை தந்து இலங்கையின் பழமைவாய்ந்த புதுவருட கலாசார முறைகளை கண்டு மகிழ்ந்தனர்.
Published by

Leave a comment