காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக நேற்று 15-04-2015 புதன்கிழமை அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலையை (மியூசியத்தை) பார்வையிட அதிகளவான வெளியூர் பொது மக்கள் அங்கு வருகை தருவதால் அதற்கான நேரம் விஷேடமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காத்தான்குடி பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசம் மற்றும் ஏனைய மாவட்டங்களிலிருந்து மியூசியத்தை பார்வையிட வருகை தருவோர் வெள்ளிக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில் காலை 10.00 மணி தொடக்கம் 04.00 மாலை மணி வரை பார்வையிட முடியும் எனவும் விஷேடமாக நாளை 17 வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் 24 வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 02.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை பார்வையிட முடியும்.
Published by

Leave a comment