மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவன் கௌரவிக்கப்படாதது ஏன்?

scholorship wamy– ஏறாவூர் அபூ பயாஸ்

காத்தான்குடி: “EDUCATION DEVELOPMENT FORUM & WORLD ASSEMBLY OF MUSLIM YOUTH” எனும் WAMY அமைப்பினரால் நேற்று (12) காலை 09.00 மணிக்கு பொலநறுவ, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மொழி ரீதியிலான 2014 , ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து சான்றிதழும்,பதக்கமும் அணிவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு இடையிடையே அரசியல் பிரமுகர்கள் சமூகமளித்து மாணவர்களுக்கு சான்றிதழும்,பதக்கமும் அணிவித்துவிட்டு சென்று விட்டனர்.

சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கான சரியான இருப்பிட ஒழுங்குகள் செய்யப்படவில்லை.அவர்களது பெற்றோகள் வெளி மாவட்டத்திலிருந்து பெருத்தொகையான பணத்தை செலவு செய்து இங்கு வந்தபோதும் அவர்களைக்கூட இவ்வமைப்பினர் சரியான முறையில் வரவேற்க்கவில்லை.

scholorship wamy

இவ்வளவு பணம் செலவு செய்து எங்கள் குழந்தை செல்வங்களை கௌரவிப்பதை பார்க்க வந்த எங்களுக்கு “இந்த மட்டையும், தகடும்தானா ” என்று அழுத்துக்கொண்ட பெற்றோர்களையும் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வளவு செலவு செய்து நடாத்தும் இவ்வமைப்பினர் ஏன்? முறையான திட்டமிடல் இன்றி மாணவர்களை அலுப்படையச் செய்கிறரர்கள். தனித்தனி மாவட்டங்களாக வெவ்வேறு நாட்களில் இந்நிகழ்வுகளை நடாத்தலாம்தானே ?

anver arshaq
மாணவன் அன்வர் அர்ஷாக்

உங்களால் முடியாவிட்டால எங்கள் மாவட்ட நிகழ்வை மட்டும் தனியாக சிறப்பாக நடாத்த நாங்கள் தயாராகவிருக்கிறோம் என “ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தின்” தலைவர் தெரிவித்ததையும் கேட்கக் கூடியதாக இருந்தது.

இத்தனைக்கும் மத்தியில் நேற்று WAMY அமைப்பினால் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கௌரவிப்பு நிகழ்வுக்கு அதே ஊரை சேர்ந்த மாவட்டத்தில் முதலிடம் பெற்று 193 புள்ளிகளைப் பெற்ற ஹிளுரியா வித்தியாலய மாணவன் அன்வர் அர்ஷாக் என்ற மாணவனின் பெயர் இவர்களது ஏற்பாட்டு பட்டியலில் இடம் பெறாமல் போனது ஏன்?? என்று தெரியவில்லை.

wamy

அம்மாணவன் தனது தந்தையுடன் கலாசார மண்டபத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதைப் பார்த்த போது உண்மையில் வேதனையாகவே இருந்தது.

இம்மாணவனின் பெயர் உள்வாங்கப்பாடமைக்கு பாடசாலை அதிபர் காரணமா ? அல்லது WAMY அமைப்பினர் காரணமா ?

Published by

Leave a comment