க.பொ.த சாதாரண தர பரீ்ட்சை எழுதிய மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய புள்ளிவிபரவியல் கற்கைநெறி

z scoreமக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்

சம்மாந்துறை: க.பொ.த சாதாரண தர பரீ்ட்சை எழுதி விட்டு கலை-மற்றும் வர்த்தக பிரிவில் உயர்தரம் கற்க இருக்கும் மாணவர்களின் முழுக் கவனத்திற்கு. அதாவது கடந்த காலங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் Z புள்ளி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்தில் எதிர் கொள்ளும் சவால்களையும் நாம் யாவரும் நன்கு அறிவோம்.

எமது மாணவர்கள் பரீட்சையில் அதி கூடிய பெறுபேறுகளைப் பெற்று வருகின்ற போதிலும், எதிர்பாராத விதமாக அவர்கள் தெரிவு செய்யும் பாடச்சேர்க்கைகள் மூலம் அவர்களின் பல்கலைக்கழக நுழைவு கேள்விக் குறியாகிப் போகுகின்றது இதற்கு Z புள்ளியின் தாக்கமே காரணமாகும்.

நாடளாவிய ரீதியில் குறித்த சில பாடங்களுக்கு அதிகளவிலான மாணவர்கள் முக்கியத்துவத்தைச் செலுத்துவதன் காரணமாகவே அப் பாடங்களுக்கான Z புள்ளி குறைவடைகின்றது.

இதனால் சம காலத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதி கூடிய பெறுபேறுகளைப் பெறுவது மட்டுமல்லாது மாணவர்கள் Z  புள்ளியில் அதிகரிப்பை எவ்வாறு ஏற்படுத்துவது என்ற சவாலுக்கு மாணவர்கள் முகம் கொடுக்கின்றார்கள்.

இந்த வகையில் மாணவர்களின் Z  புள்ளியின் தரத்தை அதிகபடுத்த ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகவே வணிகப் புள்ளிவிபரவியல் அமைகின்றது. புள்ளிவிபரவியலின் துறைரீதியான ஓர் அலகே புள்ளிவிபரவியலாகும். கணிதப் பாடத்தில் தரம் 09, 10 மற்றும் 11ம் தரங்களில் புள்ளிவிபரவியலுக்குக்கான அடிப்படையான அம்சங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த வகையில் இவ் வணிகப் புள்ளிவிபரவியலுக்கு அடிப்படையாக பின்வரும் பாட அலகுகளே காணப்படுகின்றன.

01. தரவுகளை வகைப்படுத்தல்

02. புள்ளி விபரவியல் பரம்பல்.

03. தொடைகள்.

04. நிகழ்தகவு.

இங்கு G. C. E (O/L) பரீட்சையில் கணிதப் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டு G. C. E (A/L) இல் வர்த்தம் மற்றும் கலைப்பிரிவில் கல்வி கற்ற விரும்பும் மாணவர்கள் இப்பாடத்தினை தெரிவு செய்வது விரும்பத் தக்கதாகும் அது அவர்களின் Z புள்ளியின் தரத்தை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது G.C.E. (O/L) பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகள் உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தகத் துறையில பயில விரும்பும் போது உங்களுக்குல் குழப்ப நிலை ஏற்படும் எவ்வாறான பாடங்களை தெரிவு செய்வது..??? எவ்வாறு Z புள்ளியில் தரத்தை கூட்டுவது போன்ற குழப்பங்களுக்குல் சிக்கிக் கொண்டிருப்பீர்கள்.

ஆகவே Z புள்ளி தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும், வணிகப் புள்ளிவிபரவியல் எவ்வாறு உங்களுக்கு சிறந்த Z புள்ளிகளைப் பெற்றுக் கொடுக்கின்றது போன்ற விடயங்களையும், ஆலோசனைகளையும் நீங்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

இத்தகைய மாணவர்களின் நன்மை கருதி புள்ளிவிபரவியலில் சிறப்புப் பெற்ற MM. Ahamed Basheer Sir (BA Statistics-SEUSL) ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் MM. Ahamed Basheer அவர்களைத் தொடர்பு கொண்டு இது சம்பந்தமான தெளிவைப் பெறலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம்.

MM. Ahamed Basheer Sir  – 0770774465
(BA Statistics-SEUSL, Dip.in.PCR, Dip.in.HRM)
மின்னஞ்சல் –  statbasheer@gmail.com

Published by

Leave a comment