புத்தளம்: றிசாத் பதியுதீன் என்கின்ற ஒரு அமைச்சர் எமக்கு கிடைக்காமல் போயிருந்தால் வடக்கில் எமது தாயகத்தில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது என மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பிர் அப்துல் காதர் நவ்பீல் தெரிவித்தார்.
புத்தளம் பாலாவி கரம்பை ஏ முகாமில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சனுாஸ், மாந்தை உப்புக் கூட்டுத்தாபன தலைவர் எம்.அமீன், இணைப்பாளர் ஆதிர், முஜாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அல்-இன்சாரா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த விளையாட்டுப் போட்டியில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டர்.
மேலும் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது,
இன்று அமைச்சர் அவர்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் அன்று நாம் அவல நிலையில் இருந்த போது எதை செய்தார்கள். இந்த அமைச்சர் மற்றும் எமக்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நாம் எமது உரிமைகளையும், இடங்களயும் இழந்திருப்போம். எதையும் செய்யாமல் வெறும் வெற்றுப் பேச்சுக்களை பேசுபவர்களை நம்பி நடப்போம் என்றால் அது எமது எதிர்கால இருப்பை கேள்விகுறியாக்கிவிடும் என்றும் அவர் இங்கு கூறினார்.
Published by

Leave a comment