பாகிஸ்தானில் பாலம் கட்டிக்கொண்டிருந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் பாலம் கட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்தித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
வெளியிடங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பதால், இவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தொழிலாளர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பலுச்சிஸ்தான் விடுதலை முன்னணி என்ற அமைப்பு இந்த தாக்குதலை தாம் நடத்தியதாக உரிமை கோரியுள்ளது.
Leave a comment