மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் வியாபார சந்தை ஆரம்பித்து வைப்பு

batticaloa (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மற்றும் ‘சேவ் த சில்ரன்’ நிறுவனங்கள் இணைந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வியாபார சந்தை 09-05-2015 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒரு தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் அவசியம் எனும் தொனிப்பொருளில் பெண்களின் வியாபார சந்தையை வலுப்படுத்தும் முகமாகவும், பண்டிகைக்காலத்தை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இம் மாபெரும் வியாபார சந்தையை மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆரம்பித்து வைத்தார்.

batticaloa (2)

இம் மாபெரும் வியாபார சந்தை அங்குரார்ப்பண நிகழ்வில் செவ் த சில்ரன் சர்வதேச நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான தலைவர் வில்லியம் லிங்ஸ் , வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் தலைவர் வீ.டி.சேஹராஜசிங்கம் ,வாகரை பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.ஆர்.ராஹூலநாயகி, செவ் த சில்ரன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஜூலியன் செல்லப்பா,மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கே.குகதாஸ் ,மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அருளானி சந்திரசேகரம்,மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மற்றும் செவ் த சில்ரன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

batticaloa

இவ் வியாபார சந்தையில் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான ,தரமான பொருட்களான பால் உற்பத்திப்பொருட்கள், கிராமிய பாரம்பரிய உணவுகள்,பனை மற்றும் நாட்டரிசி,அரிசிமா,உழுந்துமா மீன்கருவாடு,தின்பண்டங்கள்,நாட்டுக்கோழி முட்டை,இயற்கை பசளை பாவித்து உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள்,பழவகைகள்,சிறுவர்கள் வளந்தோருக்கான தைக்கப்பட்ட ஆடைகள்,கைப்பணிப் பொருட்கள் உட்பட பல கிராமிய உற்பத்திப்பொருட்கள் குறைந்த விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி மாபெரும் வியாபார சந்தை நாளை 10ம் ,நாளை மறுதினம் 11ம் ஆகிய திகதிகளில் காலை 9.மணி தொடக்கம் இரவு 10.மணி வரை இடம்பெறவுள்ளது.

Published by

Leave a comment