அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பேனாட் சற்று முன்னர் காலமானார்

imagesD71BYJCJ– MJ

மெல்போன்: அவுஸ்திரேலியா கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், பிரபல உலகப் புகழ்பெற்ற முன்னாள் வர்ணனையாளருமான ரிச்சி பேனாட், சற்று முன்னர் காலமானதாக அவுஸ்திரேலியா அறிவித்திருக்கின்றது. இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.

அவுஸ்திரேலியா அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சி பேனாட், ‘லெங் ஸ்பின்’- சுழற்பந்து வீச்சாளராவார். 28 போட்டிகளுக்கு தலைமைதாங்கி இருந்தார்.

imagesD71BYJCJ

டெஸ்ட் வரலாற்றில் முதன் முதலாக 2000 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட மற்றும் 200 விக்கட்டுக்களையும் வீழ்த்திய கிரிக்கட் வீரர் என்ற சாதனையையும் ரிச்சி பேனாட் பெற்றிருக்கிறார்.

imagesJJ3515YP

1952 ம் வருடம் ஜனவரி 25 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, 12-02-1964 தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வடைந்தார்.

இதன் பின்னர் சிறந்த நேரடி வர்ணனையாளராக பிரகாசித்தார்.

imagesT0XS5WY2

Published by

Leave a comment