மகா நாயக்க தேரரின் மறைவுக்கு தேசிய சூறா சபை அனுதாபம்

NSC_1எம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கர் அதி கௌரவ உடகம சிறி புத்தரகித்த மாகா நாயக்க தேரரின் மறைவு தொடர்பில் தேசிய சூறா சபை மிகவும் கவலையடைந்துள்ளதாக தேசிய சூறா சபை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தேசிய சூறா சபையின் தலைவர் ஜே. மஹ்மூதினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நீண்ட காலமாக சாசன சேவையில் ஈடுபட்டிருந்த மகா நாயக்க தேரர் அவர்கள் தேசிய ஒற்றுமைக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் ஆற்றிய செயற்பாடுகளை தேசிய சூறா சபை கௌரவத்துடன் நினைவுகூருகின்றது  எனவும் அந்த அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment