இதற்கு யார் பொறுப்பு..?

accident– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள பல வீதிகள் அரை கொங்கிறீட் வீதியாக போடப்பட்டுள்ளபோதிலும் அதன் அருகிலுள்ள வடிகான் மூடிகள் தரம் குறைந்தவையாக காணப்படுவதாக பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதற்கான காரணம் அவ்வீதிகளால் கணரக வாகனங்கள் சென்று மூடிகளை சேதப்படுத்துவதை காணமுடிகின்றது.

நேற்றய தினம் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வடிகாணுக்குள் இறங்கி வடிகாண் மூடியை சேதப்படுத்தியுள்ளதுடன் பாரிய விபத்து இடம்பெறவிருந்தது தடுக்கப்பட்டது. இதேபோல் சென்ற மாதம் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்னாள் இதே மாதிரியான விபத்து ஏற்பட்டு பாடசாலை சுவரின் மேல் விழும் நிலையில் கனரக வாகனம் காணப்பட்டது.

accident

இவ்வீதிகளில் கணரக வாகனங்கள் செல்ல தடைசெய்யப்பட வேண்டும் அல்லது வடிகாண் கொங்கிறீட் மூடிகள் தரமானவையாக போடப்பட வேண்டும் இதுவே மக்களின் கோரிக்கையாகும்.

lorry

Published by

One response to “இதற்கு யார் பொறுப்பு..?”

  1. Answer
    01. Driver
    02. Technical Officers – UC, DS Office & Kachcheri
    03. GA

Leave a reply to mohmedrislan Cancel reply