கொழும்பு: 2015 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த ஐந்து கிரிக்கட் வீரர்களில் ஒருவராக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் இடம்பெற்றுள்ளார். அதேவேளை நடப்பாண்டுக்கான உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்ககார தெரிவாகியுள்ளார்.
விஸ்டன் கிரிக்கட் சஞ்சிகையினால் ஆண்டுதோறும் வருடத்திற்கான மிகச்சிறந்த கிரிக்கட் வீரர்கள் மற்றும் உலகின் முன்னிலை வீரர் ஆகியோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான மிகச் சிறந்த வீரர்கள் பட்டியலில் இலங்கை அணித்தலைவர் மெத்தியுஸ், நியுஸிலாந்து வீரர் பட்டேல், இங்கிலாந்து வீரர் மொயின் அலி, கெரி பலன்ஸ் மற்றும் அடம் லயித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த சஞ்சிகை கடந்த 1889 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கான சிறந்த 5 கிரிக்கட் வீரர்களுக்கும் 2004 ஆம் ஆண்டு முதல் உலகின் முன்னிலை வீரருக்கான விருதினையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


![Wisden_1878[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/04/wisden_18781.jpg?w=362&h=550)
Leave a comment