சம்மேளனத்தையும் அதன் உத்தியோக பிரதி நிதிகளையும் அவமானப்படுத்தியதாக அறிந்து மிகவும் கவலையடைவதுடன் அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

mubarakதலைவர்/ செயலாளர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள்
சம்மேளனம்
காத்தான்குடி

அன்புடையீர்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் பிரதி நிதிகள் சம்மேளனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக முஸ்லிம் சமய விவகாரத்திற்கு பொறுப்பான கௌரவ ஹலிம் அமைச்சர் அவர்களை சந்திக்கச் சென்றிருந்த சமயம் காத்தான்குடிசை; சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட ஜனாப் UM முஸ்தபா (அபுல்ஹசன்) அமைச்சில் வைத்து காத்தான்குடி சம்மேளனத்தையும் அதன் உத்தியோக பிரதி நிதிகளையும் அவமானப்படுத்தியதாக அறிந்து மிகவும் கவலையடைவதுடன் அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கைத் திருநாட்டில் எந்தவொரு முஸ்லிம் பிரதேசத்திலும் இல்லாத வகையில் 56 பள்ளிவாயல்களையும் 116 உள்ளுர் அமைப்புக்களையும் ஒன்று திரட்டி சுமார் 172 அமைப்புக்களை தன்னக்கதே கொண்டு செயற்படும் ஒரு பாரிய நிறுவனம் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனமாகும்.

கடந்த பயங்கரவாத காலப்பகுதியில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கும் குடியிருப்பிற்கும் பாரிய அச்சுறுத்தல் விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட போது சம்மேளப் பிரதி நிதிகள் தங்களது உயிரை பனயம் வைத்து முஸ்லிம்களுக்காக விடுதலைப் புலிகளுடன் பேசி முஸ்லிம்களின் பாதுகாப்பை முடிந்தவரை ஏற்படுத்திக் கொடுத்தது மாத்திரமன்றி அவர்களை அச்சமின்றி வாழவும் வழியமைத்த வரலாரை எவராலும் மறுதலிக்க முடியாதது

அதே போன்று பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பிரிவினர்களுக்கும் காத்தான்குடி பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலைகளின் போது காத்தான்குடி இளைஞர்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் சந்தித்துப் பேசி சுமுக நிலையை ஏற்படுத்தி பல்வேறு அழிவுகளையும் வீன் பிரச்சினைகளையும் தடுத்து நிறுத்தி காத்தான்குடியின் கௌரவத்தை பாதுகாத்த தங்களது உண்னதமான பணிகளை எவரும் மறக்க முடியாது

கிரிஸ் மனிதன் பிரச்சினையை கட்டுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கென எந்தவொரு அரசியல் பிரதி நிதிகளையும் அழைக்காது காத்தான்குடியை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளக் கூடியவர்கள் காத்தான்குடி சம்மேளனம் தான் என அறிந்து இந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் விசேட விமானத்தை அனுப்பி அழைத்து பேசிய நம்பிக்கைக்குறியவர்கள் நீங்கள்

அது மாத்திரமின்றி காத்தான்குடியில் வசிக்கும் வரிய ஏழைகள் பயண்பெற வேண்டும் என்ற ஒரே நன்னோக்கோடு எந்தவொறு ஊரிலும் இல்லாத வகையில் கூட்டு சக்தாக் திட்டம், கூட்டு உழ்கியா திட்டம், பாரிய நோய் நிவாரண நிதித் திட்டம், குறைந்த செலவில் புனித உம்ரா, ஹாஜ் கடமையைகளை நிறைவேற்றுவதற்கான வசதிகள், புனித இஸ்லாத்தை தழுவும் நவ முஸ்லிம்களை பாராமரிக்கும் செயற் திட்டம், சக்காத் நிதி மூலம் வறிய ஏழைகளுக்கான வீட்டுத் திட்டம், மலசல கூட வசதிகள் அற்ற குடும்பங்களுக்கான மலசல கூடம் அமைத்து கொடுக்கும் திட்டம், கொடுக்கல் வாங்கல் பிணக்குகளை தீர்த்து வைக்கும் செயற்பாடு, திருமண நல்லினக்க செயற்பாடு, கல்விச் செயற்பாடு ஊடாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என இன்னும் எத்தனையோ தங்களது உண்னதமான உயர்ந்த பணிகளை எந்தவொரு சுயநலமும் இன்றி தங்களை முழுமையாக அர்ப்பனித்து செயற்பட்டு வருகின்றீர்கள்.

அத்துடன் காத்தான்குடியிலும் அதனை அன்டிய முஸ்லிம் பிரதேசங்களிலும் இயங்கிவரும் பள்ளிவாயல்களில் நிருவாகத் தெரிவின் போது அங்கே மார்க்க குழுக்களுக்கிடையே முறுகல் நிலை கைகளப்பு ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என தங்களது பிரதி நிதிகள் வக்பு சபை பிரதி நிதிகளுடன் இணைந்து செயற்பட்டு அந்த நிருவாகத் தெரிவின் போது மிகவும் பொறுப்போடு செயற்பட்டு காத்தான்குடியின் கௌரவத்தை பாதுகாக்கும் தங்களது செயற்பாடு பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

இவ்வாறு எதுவித எதிர் பார்ப்புகளும் இன்றி தங்களது காலத்தையும் நேரத்தையும் செலவிட்டு அரும்பணி செய்து வரும் தங்களது பிரதி நிதிகள் ஒரு சில தராதரமற்ற நானயம் இல்லாத ஊழல் பேர்வழிகளால் அவமானப்படுத்தப்பட்ட விடயத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதுவித சம்மந்தமும் கிடையாது காத்தான்குடியில் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்வர்கள் இருந்த போதிலும் சம்மேளனத்தை விமர்சித்தது கிடையாது ஏதோ ஒரு வகையில் அதனையும் அதன் தலைமையையும் மதித்து அவர்களுக்குறிய கௌரவத்தை கொடுத்து வந்தார்கள் என்பது வரலாராகும்

அவ்வாறு நடந்து கொண்டவர்கள் அவர்களது தனிப்பட்ட பிழையான விடயங்களை சம்மேளனத்தின் அனுசரனையோடு அடைந்து கொள்ள எத்தனித்து இறுதியில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டதனை சகிக்க முடியாது காரணத்தினால் அவ்வாறு நடந்து கொண்டுள்ளார் அதற்காக நான் ஐக்கிய தேசியக் கட்சி காத்தான்குடி மத்திய குழு சார்பாக மீண்டும் ஒரு முறை எனது கவலை தெரிவித்து இவ்வாரான பொறுப்பற்றவர்களின் செயற்பாடு கவனத்தில் கொள்ளாது உங்களது புனிதமான பணிகளை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் உங்களது செயற்பாடுகளை எல்லாம் வல்ல அள்ளாஹ் பொருந்திக் கொள்வதோடு உங்கள் அனைவரினதும் தேக சுகத்திற்கும் நீடித்த ஆயுலுக்கும் அள்ளாஹூவை பிரார்திக்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்

இவ்வண்ணம்

……………………
VTM முறாக் JP

Published by

2 responses to “சம்மேளனத்தையும் அதன் உத்தியோக பிரதி நிதிகளையும் அவமானப்படுத்தியதாக அறிந்து மிகவும் கவலையடைவதுடன் அதற்காக எனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்”

  1. mohmedrislaam Avatar

    Koli – chicken Balla. Very very id-ot.

Leave a reply to ABDUL RAHEEM Cancel reply