அஸ்கிரிய மகாநாயக்க தேரர் காலமானார்

Rathanapala Mahanayake Thera– எம்.ஐ. அப்துல் நஸார்

கண்டி: அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிகாய பிரிவின் பிரதம சங்க நாயக்கர் அதி பூஜ்ஜிய உடகம சிறி புத்தரகித்த மாகா நாயக்க தேரர் இன்று காலை (08) காலமானார்.சிங்கப்பூரில் மௌன்ட் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தின் உடகமவில் 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆந் திகதி பிறந்த இவர் 1944ஆம் ஆண்டு துறவியானார். அதிலிருந்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பௌத்த சமயத்திற்காகச் சேவையாற்றியுள்ளார்.

வழக்கமாக நிகாயாக்களின் தலைவர்களாக நியமிக்கப்படுவோருக்கே மகா நாயக்கர் பட்டம் வழங்கப்படுகின்றது.

Rathanapala Mahanayake Thera

தேரவாத பௌத்த நாடொன்றில் மகா நாயக்கர் பட்டம் மிக முக்கியமானதொரு பட்டமாகக் கருதப்படுகின்றது.

இறக்கும்போது மகா நாயக்க தேரருக்கு வயது 86

Published by

Leave a comment