பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக சோமசுந்தரம் கோகுலதாசன்

somasundaram– ஏ.எல்.எம்.  தாஹிர்

கொழும்பு: பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக சோமசுந்தரம் கோகுலதாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களால் இன் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியான இவர் 1981 தொடக்கம் 2003 வரையில் பனை அபிவிருத்திச் சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும், தலைமை நிர்வாக அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலக பொது முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளதோடு 2011 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நிகழ்ச்சி இணைப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

somasundaram

Published by

Leave a comment