திக்ரித்: இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிடம் இருந்து திக்ரித் நகரை அரசாங்க படைகளும், ஷியா ஆயுதக்குழுக்களும் மீளக்கைப்பற்றியதை அடுத்து, அங்கு மனிதப் புதைகுழிகள் என்று சந்தேகிக்கப்படும் 12 இடங்களை ஈராக்கிய தடயவியல் குழுக்கள் தோண்ட ஆரம்பித்துள்ளன.
ஈராக்கின் வடபகுதியை கடந்த ஜூனில் விரிவுபடுத்தத் தொடங்கியதை அடுத்து படுகொலை செய்யப்பட்ட ஷியா படையினர் 1700 பேர் வரையிலானோரின் சடலங்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
சுன்னிகளின் பலம் மிக்க இடமான திக்ரித்துக்கு அருகே அமெரிக்காவின் முன்னாள் தளமான ஸ்பீய்ச்சர் முகாமை இஸ்லாமிய அரசு கைப்பற்றியதை அடுத்து, ஷியா படையினர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு, திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டனர். ஈராக்கிய ஷியா சமூகத்தின் மீதான இஸ்லாமிய அரசின் வெறுப்பை இந்த நடவடிக்கை காண்பிப்பதாக பார்க்கப்படுகின்றது.
Published by


Leave a comment