‘சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்கு சகல தகுதிகளும் உண்டு’: யஹ்யா காண்

yahyakanசாய்ந்தமருது: எமது சாய்ந்தமருது கல்விமான்கள், புத்துஜீவிகள், தேவைக்கும் மேலதிகமான மக்கள் தொகை, பிரதேச செயலகம், தேசிய பாடசாலைகள், எத்தனையோ அரசாங்க காரியாலயங்கள் உள்ள ஒரு இடம் .ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு தனிப்பட்ட சுயநலதுக்காக நமக்கு கிடைக்க வேண்டிய மாநகர சபையோ, நகர சபையோ, பிரதேச சபையோ தடுக்கப்பட்டு வந்தது என்பது எல்லோரும் அறிந்த விடயம்.

தற்போது இந்த மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை, சம்மந்தமாக சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை இந்த கோரிக்கையை முன்னெடுத்து செல்ல உள்ளதாக அறிகிறேன்.

இதற்கு நான் எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன். அதற்கு இணங்க நான் இந்த முயற்சிக்கு எனது பூரண ஆதரவை தெரிவிக்கிறேன் என்பதோடு, இது சம்மந்தமாக எமது ‘சென்றல் கொமிட்டி’ உட்பட சாய்ந்தமருது சகல அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒரு கருத்துடன் உள்ளார் என்பதோடு, நமது பாரளமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் பூரண ஆதரவை தெரிவித்திருப்பதும் நமக்கு ஒரு வெற்றி நிச்சியம். அனைவரும் ஒன்று படுவோம்.

எமது கட்சி (SLMC) உடைய தலைவர் அவர்களும் உதவுவார் என்று நம்புகிறேன். தலைவர் சாய்ந்தமருதுக்கு வருவதை ஒரு நாளும் தடுக்க மாட்டார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது சம்மாந்தமாக எனது பூரண சம்மதக் கடிதம் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று எ.சி.எஹியாகான் SLMC உடைய உயர்பீட உறுப்பினர் அம்பாறை மாவட்ட பொருளாளர் நிதி மற்றும் கணக்காளர்க்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment