காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் ஏற்பாட்டில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்திற்கான சீருடை வழங்கும் நிகழ்வு

sunrise– ஏ.எல். டீன்பைரூஸ்

காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரியின் கல்வி ,கலை கலாச்சார,சமூக சேவை பிரிவினால் பல்வேறு பட்ட சமூகப்பணிகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதன் ஓர் அங்கமாக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்திற்கான சீருடை வழங்கும் நிகழ்வு (07.04.2015 செவ்வாய்) கல்லூரியில் அதன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.பீ.எம்.றமீஸ், செயலாளர் எம்.இன்ஷாட்அலி, உறுப்பனர்களான என்.ரீ.பாறூக், எம்.ஏ.சீ.எம்.சமட், எம்.ஜ.எம்.பைசர், எம்.எஸ்.எம்.அஸ்ஹர் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அல்மனார் கல்லூரியின் உறுப்பினர்களான எம்.இஸ்மாயீல்(ஓ.ஆசிரியர்) எம்.நௌசாத், எம்.எம்.குறைஸ், அஷ்ஷெய்ஹ் எம்.அன்சார் (மதனி) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

sunrise

இதன் போது உரையாற்றிய அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),

“சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் கடந்த கால வரலாற்று பதிவகளை தயார்படுத்திக் கொள்ளுமாறும் அதன் மூலம் எதிர்காலத்தில் இதனை விடவும் கூடுதலாக கழகத்திற்கு தன்னால் உதவ முடியும்” என்று தெரிவித்தார்.

sunrise (2)

“கால்பந்தாட்டம் என்பது இன்று இளைஞர்கள் மத்தியில் ஆர்வமில்லாத ஓர் விளையாட்டாக மாறிவருகின்றது எனவே ‘உதைபந்தாட்ட வாரம்’ என்ற ஒன்றை ஆரம்பித்து அதனூடாக உதைபந்தாட்டத்தை வளர்க்க முடியும்” எனவும் ஆலோசனை வழங்கினார்.

இதன் போது கல்லூரியின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) கழகத்திற்கான சீருடையினை கழகத்தில் தலைவர் எஸ்.எம்.பீ.எம்.றமீஸிடம் கையளித்தார்.

sunrise (3)

கழகத்தின் சார்பாக கல்லூரியின், செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) உட்பட அதன் அனைத்து நிர்வாகிகளுக்கும் கழகம் சர்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எஸ்.எம்.பீ.எம்.றமீஸ.

Published by

Leave a comment